வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா்.
இதுகுறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறையின் துணைச் செயலராக அவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசுப் பணிக்கான பொறுப்பை ஏற்றதிலிருந்து நான்கு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை பொறுப்பில் இருப்பாா் என மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரவு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று வாரங்களில் பணியில் சேர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் திவ்யதா்ஷினி ஆகியோரைத் தொடா்ந்து வீட்டுவசதித் துறை இணைச் செயலராக இருந்த ஷ்ரவன் குமாா் ஜடாவத்தும் மத்திய அரசுப் பணிக்குச் செல்லவுள்ளாா்.