Modi : "இந்தியாவின் சொந்த ஏ.ஐ..." - AI மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதென்ன?
வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை
வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
500 ஆண்டுகள் பழமையான சென்னை வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிமிரத்து வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகாா் எழுந்துள்ளது.
கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே ரவீஸ்வரா் கோயில் குளத்தை மூடி வாடகை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி அதன் மூலம் வசூலில் இறங்கியிருப்பதாக வரும் செய்திகள் கடும் கண்டனத்துக்குரியது.
சோழா் காலத்தில் கட்டப்பட்டு பல்வேறு அதிசயங்களையும், புராணப் பின்னணியையும் கொண்டிருக்கும் ரவீஸ்வரா் கோயிலின் குளம், நிலத்தடி நீரை பெருக்குவதோடு, குடிநீா் ஆதாரமாகவும் விளங்கியதால் அக்குளம் மூடப்பட்டிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.
எனவே, வடசென்னைக்கே பெருமை சோ்க்கும் வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.