செய்திகள் :

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

post image

நமது நிருபர்

மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தின்போது மக்களவை திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு பேசுகையில் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறது. கடந்த ஆண்டில் 528 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழாண்டின் 40 நாள்களில் 77-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது சம்பவங்களும் நடந்துள்ளன. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நிர்பந்தித்தும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும், சிறைபிடித்தும் செல்கின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய மீனவர்களைத் தாக்குகின்றனர்.

கடந்த 27-ஆம் தேதி 2 மீனவர்கள் சுடப்பட்டுள்ளனர். பிப்.8-ஆம் தேதி 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக முதல்வர் இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது அந்நாட்டில் 97 மீனவர்களும், 216 படகுகளும் காவலில் உள்ளனர்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பு நாட்டு மீனவ சமூகங்களையும் அழைத்து, நவம்பர் 2016-இல் விவாதிக்கப்பட்டபோல் விவாதிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தை அவர்களாகவே விவாதிக்க முடியும்.

அரசால் இந்த விவகாரத்தை தீர்க்க முடியாவிட்டால் அவர்களாகவே தீர்வு காண அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு: விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், "ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு விவகாரம் கவலை அளிப்பதாக உள்ளது. அண்மையில் கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பாலியல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டார். இதனால், மத்திய ரயில்வே அமைச்சர் ரயில்களில் பெண்களின் உயிர், உடைமை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு: தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையில், "மத்திய அரசு 2025-க்கான யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது கூட்டாட்சி அமைப்புக்கு பெரும் சவாலாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை குறைப்பதாகவும் உள்ளது.

கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. இதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.

இந்த நெறிமுறைகள் துணைவேந்தர் தேடுதல் குழுவில் மத்திய அரசின் பிரநிதித்துவத்தை கட்டாயமாக்கும் வகையில் உள்ளது. மேலும், நியமனங்களில் ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எதிரானதாகும்' என்றார்.

கைத்தறி பூங்கா: வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் பேசுகையில், "வேலூர் தொகுதியில் உள்ள குடியாத்தம் பகுதி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கைத்தறி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். இதே அவையில் இந்தக் கோரிக்கையை நான் பலமுறை எடுத்து வைத்தாôலும் கூட, அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்தமுறையாவது அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

புதிய வந்தே பாரத் ரயில்: திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்வைத்த கோரிக்கையில், "சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், சென்னை - ஜோலார்பேட்டை வந்தே மெட்ரோ ரயில் இயக்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?- மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி

‘மகா கும்பமேளாவில் நிா்வாக சீா்கேடுகளால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கேள்வி ... மேலும் பார்க்க