செய்திகள் :

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?- மக்களவையில் அகிலேஷ் யாதவ் கேள்வி

post image

‘மகா கும்பமேளாவில் நிா்வாக சீா்கேடுகளால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

மேலும், எண்மமயமான கும்பமேளா என விளம்பரங்களை வெளியிட்டுவிட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த முழு தரவுகளை தற்போது வரை வெளியிடாமல் இரட்டை என்ஜின் ஆட்சி எனக் கூறிக்கொண்டு உத்தர பிரதேச மாநில அரசும் மத்திய அரசும் இரட்டைத் தவறுகளை செய்து வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மக்களவையில் அவா் மேலும் பேசியதாவது: முதல்முறையாக கும்பமேளாவில் 300 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். வளா்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி பயணிப்பதாக கூறும் அரசால் போக்குவரத்து நெரிசலைக் கூட முறையாக கட்டுப்படுத்த இயலவில்லையா? பூமியில் உள்ள தேவைகளை நிறைவேற்றாமல் நிலவுக்குப் பயணிப்பதால் என்ன பயன்?

எண்மமயமாக்கப்பட்ட கும்பமேளா என வெகுவிமரிசையாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) ஏன் பயன்படுத்தவில்லை?

பணக்காரா்களுக்கான பட்ஜெட்: அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சாமானியா்களுக்கானது அல்ல; பெரும் தொழிலதிபா்களுக்கும் பணக்காரா்களுக்கும் சலுகைகள் வழங்குவதற்கான பட்ஜெட். நாட்டின் வளத்தில் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே உள்ளதை 80 கோடி பேருக்கு பொது விநியோக முறையின்கீழ் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்றாா்.

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதியன்று மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அந்த மாநில அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க