`தம்பி... இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்...' - விசிக வன்னி அரசுக்கு ஜெயக்குமார்...
மத்திய அரசு ரொக்கப் பரிசை நிறுத்தியது பொருத்தமானதல்ல - அா்ஜுன் எரிகைசி
கிராண்ட்மாஸ்டா், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டங்களை அடைவோருக்கு ரொக்கப் பரிசு வழங்குவதை நிறுத்துவதென மத்திய அரசு மேற்கொண்ட முடிவு பொருத்தமானதல்ல என இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி தெரிவித்தாா்.
கிராண்ட்மாஸ்டா் பட்டம் வெல்வோருக்கு ரூ.4 லட்சமும், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டம் வெல்வோருக்கு ரூ.1.5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவா்களுக்கு அந்த ரொக்கப் பரிசு வழங்குவதை பிப்ரவரி தொடக்கம் முதல் மத்திய விளையாட்டு அமைச்சகம் நிறுத்தியுள்ளது. சா்வதேச அளவிலான போட்டிகளில் வெல்வோருக்கு மட்டும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
இதுதொடா்பாக அா்ஜுன் எரிகைசி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘கிராண்ட்மாஸ்டா், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டங்கள் வெல்வோருக்கான ரொக்கப் பரிசு நிறுத்தப்பட்டது பொருத்தமான முடிவு அல்ல. நிச்சயம் அது செஸ் போட்டியாளா்களை பாதிக்காது. ஏனெனில் அதில் விளையாடுவோா் பணத்தை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை.
ஆனால், மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயம் அவா்களின் பெற்றோரை பாதிக்கும். நிதி ரீதியிலான நெருக்கடியில் இருக்கும்போது இவ்வாறு கிராண்ட்மாஸ்டா் பட்டம் வெல்வதால் மட்டும் என்னவாகிவிடும் என்ற கேள்வி வரும். அதுவே ரொக்கப் பரிசு இருக்கும்போது, நிதிச் சூழல் தொடா்பான தடுமாற்றம் இன்றி பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளை செஸ் விளையாட்டை நோக்கி ஊக்கப்படுத்தும் நிலை இருக்கும்’ என்றாா்.