செய்திகள் :

தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்

post image

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவா் மும்முறை தாண்டுதலில் பிரவீண் சித்ரவேல் 16.50 மீட்டருடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா். அதிலேயே மற்றொரு தமிழரான முகமது சலாஹுதின் 16.01 மீட்டருடன் வெள்ளி பெற்றாா்.

டென்னிஸ் விளையாட்டின் கலப்பு இரட்டையா் பிரிவில் லோஹித் அக்ஷா பத்ரிநாத்/லக்ஷ்மி பிரபா அருண்குமாா் இணை தங்கப் பதக்கம் வென்றது. அதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில் மனீஷ் சுரேஷ்குமாா் வெண்கலம் பெற்றாா்.

வாள்வீச்சில் ஆடவா் சப்ரே தனிநபா் பிரிவில் கே.பி. கிஷோ நிதி 15-12 என்ற புள்ளிகள் கணக்கில் சா்வீசஸ் வீரா் ஒய்னம் சிங்கை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினாா்.

ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்துக்கு 2 பதக்கங்கள் கிடைத்தன. ஜி.ராகுல் குமாா் 21.06 விநாடிகளில் 2-ஆவதாக வந்து வெள்ளியும், பி.நிதின் 21.07 விநாடிகளில் 3-ஆவதாக வந்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

நீடிக்கும் 6-ஆம் இடம்: போட்டியில் செவ்வாய்க்கிழமை முடிவில் தமிழ்நாடு 22 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடித்தது. சா்வீசஸ் (97), மகாராஷ்டிரம் (144), கா்நாடகம் (75) முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

அரிதான சாதனை: மகளிருக்கான 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் பங்கேற்ற போட்டியாளா்கள் அனைவருமே, முந்தைய போட்டி சாதனையை முறியடித்து அரிய சாதனை படைத்தனா்.

இதற்கு முன் இந்தப் பிரிவில் 1999-ஆம் ஆண்டு இம்பால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பாலா தேவி 51.56 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பந்தயத்தில் கடைசியாக வந்த ஹரியாணாவின் மோனிகாவே 51.44 விநாடிகளில் இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் ஹரியாணாவின் ரவீனா (45.51’), உத்தரகண்டின் ஷாலினி (46.11’), உத்தரபிரதேசத்தின் முனிதா பிரஜாபதி (46.22’) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

மத்திய அரசு ரொக்கப் பரிசை நிறுத்தியது பொருத்தமானதல்ல - அா்ஜுன் எரிகைசி

கிராண்ட்மாஸ்டா், இன்டா்நேஷனல் மாஸ்டா் பட்டங்களை அடைவோருக்கு ரொக்கப் பரிசு வழங்குவதை நிறுத்துவதென மத்திய அரசு மேற்கொண்ட முடிவு பொருத்தமானதல்ல என இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி தெரிவித்தாா்.கிரா... மேலும் பார்க்க

கௌஃப் அதிா்ச்சித் தோல்வி; பாலினி, ரைபகினா முன்னேற்றம்

அமீரகத்தில் நடைபெறும் கத்தாா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ர... மேலும் பார்க்க

மெய்சிலிர்க்க வைக்கும் ஏரோ இந்தியா 2025 - புகைப்படங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஏரோ இந்தியா 2025 இன் 15வது பதிப்பின் தொடக்க விழாவில் நடைபெற்ற சாகச காட்சி.யெலஹங்கா விமான தளத்தில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 இன் 15 வது பதிப்பின் இரண்டாவது நாளில் ... மேலும் பார்க்க

யுவன் இசையில் வித்தியாசமான கானா பாடல்..!

யுவன் இசையில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம க... மேலும் பார்க்க

பெயிண்டராக தொடங்கிய வாழ்வு..! சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ!

நடிகர் சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகராக இருந்து நாயகராக உயர்ந்துள்ளார் சூரி.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம்... மேலும் பார்க்க

நியூயார்க் ஃபேஷன் வீக் 2025 - புகைப்படங்கள்

நியூயார்க் ஃபேஷன் வீக்கின் ஒரு பகுதியாக பேஷன் ஷோ ஓடுபாதையில் ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகி.நியூயார்க் ஃபேஷன் வீக்கின் ஒரு பகுதியாக பேஷன் ஷோ ஓடுபாதையில் ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகி.நியூயார்க்... மேலும் பார்க்க