செய்திகள் :

பெயிண்டராக தொடங்கிய வாழ்வு..! சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ!

post image

நடிகர் சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகராக இருந்து நாயகராக உயர்ந்துள்ளார் சூரி.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சூரிக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பெயிண்டர்களின் விடியோவை பகிர்ந்து, “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோ பின்னணியில் விடாமுயற்சி இசை ஒலிப்பது அஜித் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது.

யுவன் இசையில் வித்தியாசமான கானா பாடல்..!

யுவன் இசையில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம க... மேலும் பார்க்க

பிறந்தநாள் வாழ்த்துகள் டிரைலர்!

தேசிய விருதுவென்ற நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது.ரோஜி மேத்திவ், ராஜூ சந்திரா தயாரிப்பில் ராஜூ சந்திரா எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தி... மேலும் பார்க்க

அகத்தியா டிரைலர்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தி... மேலும் பார்க்க

18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் 36 கதாபாத்திரங்கள் தினமும் இரண்டிரண்டாக அறிமுகமாகி வருகின்றன.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் தேதி!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்... மேலும் பார்க்க

வா வாத்தியார் என்ன ஆனது?

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியீட்டிற்குத் தாமதமாகி வருகிறது.கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்கள... மேலும் பார்க்க