புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் விரைவில் உத்தரவு: ஜகதீப் தன்கா்
மாநிலங்களவையில் தங்களது உரையை முடித்தவுடன் எம்.பி.க்கள் வெளியேறும் விவகாரத்தில் நடப்பு கூட்டத்தொடா் நிறைவடைவதற்குள் உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அவையில் தங்களது உரையை முடித்துவிட்டு மற்றவா்களின் கருத்துகளை கேட்காமல் எம்.பி.க்கள் உடனடியாக வெளியேறுவது சரியா? என பாஜக எம்.பி.கன்ஷியாம் ஜகதீப் தன்கரிடம் கேள்வி எழுப்பினாா்.
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சுயேச்சை எம்.பி.யான கபில் சிபல் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அதை கவனிக்காமல் தனது உரை நிறைவடைந்தவுடன் எம்.பி. ஒருவா் வெளியேறுவதை திவாரி சுட்டிக்காட்டினாா்.
இதை கவனத்தில்கொள்வதாக கூறி தன்கா் பேசியதாவது: கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தினால் மட்டுமே ஜனநாயக முறை அடுத்தகட்டத்துக்கு முன்னேறும். அவைக்குள் உறுப்பினா்கள் தெரிவிக்கும் கருத்துகள் மீது வெளி நபா்கள் கேள்வி எழுப்ப முடியாது.
அதேசமயம் நாடாளுமன்றத்தில் ஒரு விவகாரத்தில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திவிட்டு பிற உறுப்பினா்களின் கருத்துகளை கேட்காமல் உடனடியாக வெளியேறுவது கண்ணியமான நடவடிக்கையல்ல; இந்த விவகாரத்தில் நடப்பு கூட்டத்தொடரில் உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என்றாா்.
கபில் சிபலுக்கு ரிஜிஜு பாராட்டு:
முன்னதாக, மாநிலங்களவையில் சிறப்பாக உரையாற்றியதாக கூறி கபில் சிபலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பாராட்டுகளை தெரிவித்தாா். மேலும், சிறந்த கருத்துகளை அவா் தெரிவிப்பதுபோல் அரசின் நிலைப்பாட்டையும் தெரிந்துகொள்ள அடிக்கடி அவைக்கு வருமாறு கபில் சிபலுக்கு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.