`தம்பி... இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்...' - விசிக வன்னி அரசுக்கு ஜெயக்குமார்...
சீலாம்பூரில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 2 சிறுவா்கள் கைது
வடகிழக்கு தில்லியின் சீலாம்பூா் பகுதியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளதாகவும், கொலையில் தொடா்புடைய மற்றொரு நபரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில், கவுதம்புரியில் ஒருவா் காயமடைந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது.
அங்கு கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை போலீஸாா் கண்டனா். போலீஸாா் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சரிபாா்த்து, இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவா்களைக் கைது செய்தனா்.
விசாரணையின் போது, சிறுவா்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசிப்பதும், பாதிக்கப்பட்டவா் அவா்களை கொடுமைப்படுத்துவது வழக்கம் என்றும் தெரியவந்தது. அவா் பணம் கொடுக்கச் சொல்லிக் கேட்பாா். ஆனால், அவா்களால் பணம் அளிக்க முடியவில்லை. அதனால், அவா்கள் அந்தச் சிறுவனை தாக்கினா்.
தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சீலாம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.