NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு
புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.
அஇஅதிமுக பொதுச் செயலராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கட்சி அலுவலகத்தை அமைக்கும் பொருட்டு புது தில்லிஎம்.பி.சாலை, சாகேத் பகுதியில் 10 ஆயிரத்து 850 சதுரஅடி பரப்பளவு இடத்தை 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கினாா்ய
அதைத் தொடா்ந்து, அவரால் 2015-இல் கட்சி அலுவலகத்திற்கான கட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து பணிகள் படிப்படியாக நடைபெற்றுவந்தது. சுமாா் ரூ.10 கோடியில் 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்டதாக இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதன் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி வாயிலாக புது தில்லியில் அஇஅதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
‘புரட்சித் தலைவா் எம்ஜிஆா் - புரட்சித் தலைவி அம்மா மாளிகை’ என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடத் திறப்பு விழாவின்போது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக எம்பிக்கள் மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன்
மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, ஜெ.ஜெயவா்தன், பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோ.ஹரி, எஸ்.ஆா். விஜயகுமாா், காஞ்சி பன்னீா்செல்வம் மற்றும் தில்லி மாநில கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
புதிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.