கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!
விக்ரம் பிரபுவின் புதிய படம்!
நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
நடிகர் விக்ரம் டாணாக்காரன் வெற்றிக்குப் பின் இறுகப்பற்று, ரெய்டு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, இயக்குநர் வெற்றி மாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் லலித்தின் மகனும் நடிகராக அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க: விறுவிறுப்பாக நடைபெறும் 3-பிஎச்கே படப்பிடிப்பு!
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு சென்னை மற்றும் வேலூரில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/ehi7jas0/7screenstudio1739194292356494257113706865638422047405.jpg)