21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை பெத் மூனி!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனையாக பெத் மூனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாதத்தின் சிறந்த ஐசிசி வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணி வீராங்கனை கொங்கடி த்ரிஷா, மேற்கிந்தியத் தீவுகளின் கரிஷ்மா ராம்ஹரக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஜனவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க... ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோமெல் வாரிகன்!
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்திய பெத் மூனி ஐஐசி சிறந்த வீராங்கனை விருதை வெல்லுவது இதுவே முதல் முறையாகும். மேலும், 2024 டிசம்பரில் ஆல்ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதைப் பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தொடர்ச்சியாக விருதை வெல்லுவது இரண்டாவது முறையாகும்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி, டி20 போட்டி தொடரில் 2 அரைசதங்கள் விளாசியதுடன் அதிகபட்சமாக 94* ரன்கள் குவித்தார்.
இவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஸ் செய்தது. அதிரடி பேட்டிங் மட்டுமின்றி வழக்கமான விக்கெட் கீப்பரான அலீசா ஹீலிக்கு பதிலாக மூன்று கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து அசத்தினார். பெத் மூனி மூன்று டி20 போட்டிகளில் 213 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.