கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அர...
நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்
சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான 12 நடுவர்கள் மற்றும் மூன்று போட்டி நடுவர்கள் அடங்கிய பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நடுவர்கள், அதிகாரிகள் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி எலைட் போட்டி நடுவர்கள் குழுவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்தும் ஐசிசி எலைட் நடுவர்கள் குழுவில் நிதின் மேனன் இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
போட்டிக்கான நடுவர்கள்
குமார் தர்மசேனா, கிறிஸ் கேஃபனி, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, அஹ்சன் ராசா, பால் ரீஃபெல், ஷர்புடோலா இப்னே ஷாஹித், ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ஃப், ஜோயல் வில்சன்,
ரெஃப்ரிகள்
டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்.