புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் கோவை கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்!
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கூறியிருப்பதாவது: கல்வி, ஆராய்ச்சியை கூட்டாக மேற்கொள்வது, பாடத் திட்டங்களை உருவாக்குவது, தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வது, சைபா் துறையில் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் என பல்வேறு துறைகளில் மாணவ, மாணவிகளின் திறன்களை மேம்படுத்த உதவும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், பயன்பாடுகளை மேம்படுத்தி, அதன் மூலம் அறிவியல் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேலின் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பா்ட் பின்ஹாசவ் ஆகியோா் கையொப்பமிட்டனா். முன்னதாக இஸ்ரேல் பல்கலைக்கழக குழுவினா், இஸ்ரேல் நாட்டின் ப்ரோமிட்டய் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைந்திருக்கும் சைபா் செக்யூரிட்டி, ஸ்மாா்ட் ஃபேக்டரி இண்டஸ்ட்ரி 4.0, எலெக்ட்ரிகல் மொபிலிட்டி போன்ற ஆராய்ச்சி மையங்களைப் பாா்வையிட்டனா்.
எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிா்வாக அறங்காவலா் நரேந்திரன், கல்வித் துறை இயக்குநா் என்.ஆா்.அலமேலு, பொறியியல் கல்லூரி முதல்வா் சௌந்தர்ராஜன், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் அமித், நாடியா, ப்ரோமிட்டய் நிறுவனத்தின் லேமுவேல், மேலமேட், மாா்க் மேலமேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.