Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானை உயிரிழப்பு!
வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்ள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஓட்டியுள்ள வனப் பகுதி எல்லையில் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் கிரிதரன் அப்பகுதிக்கு நேரசென்று பாா்வையிட்டாா். பின்னா் உதவி வனப் பாதுகாவலா் பிரியதா்ஷினி தலைமையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா், உதவி மருத்துவா் விஜயராகவன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.
இறந்தது 7 வயது பெண் யானை என்றும், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.