பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்
`நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார்...' - நாடாளுமன்றத்தில் சாடிய பிரியாங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்குப் பிறகு, பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `` நாட்டின் பணவீக்கப் போக்கு மிதமானதாக தெரிகிறது. 2025-26-ம் ஆண்டில் கிட்டத்தட்ட முழு கடனையும் மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காகவே அரசு பயன்படுத்துகிறது. மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிதி விவேகத்தைப் பராமரிக்கவும் பட்ஜெட் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் விரைவான மீட்சியைப் பார்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே நமது பொருளாதாரம் வேகமாக வளர உதவும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாட்டின் பட்டியலில் எப்போதும் இருப்போம். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல்வேறு சூழ்நிலைகளால் உலகம் பெரும் சவால்களை சந்தித்தது. அதனால், இப்போது பட்ஜெட்டை உருவாக்குவது முன்பை விட மிகவும் சவாலாகவே இருக்கிறது. தேசிய வளர்ச்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவைகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது." என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா, ``நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார் என நினைக்கிறேன். இந்தியாவில் பணவிக்கம் இல்லையாம், வேலைவாய்ப்பின்மை சிக்கல் இல்லையாம், பொருள்களின் விலையுயர்வு இல்லையாம்... அவர் எங்கே வாழ்கிறார் என்றே தெரியவில்லை" என்றார்.