செய்திகள் :

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் காலமானார்!

post image

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் இன்று காலமானார்.

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 3 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் இன்று காலமானார்.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னர் தனது 20-வது வயதில் இவர் இங்குள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றத் தொடங்கினார். மசூதி இடிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராமர் கோவிலுக்கும் இவரே தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!

மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே ச... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காதலி உயிரிழந்த நிலையில், இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார். மேலும் பார்க்க

பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!

ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாகப் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை பெரிதளவில் செயல்படுத்தவுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.கரோனா பேரிடர் காலத்தில் தகவல் தொழில்நுட்பத... மேலும் பார்க்க

அரசு செவிலியர் கல்லூரியில் ராகிங் கொடுமை: 5 மாணவர்கள் கைது!

கேரளத்தில் அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த மாணவர்கள் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு செவிலியர் கல்லூரியில் கடந்த 3 மாதங்களாக தங்... மேலும் பார்க்க

கும்பமேளா பயணிகள் பேருந்து விபத்து: 30 பேர் காயம்!

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகத்கரில் உள்ள கோசெலாவ் பகுதியைச் சேர்ந்த பயணிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பஞ்... மேலும் பார்க்க

புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7

புணேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளத... மேலும் பார்க்க