மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் பலி!
மும்பையில் ஜிபிஎஸ் நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது மும்பையில் பதிவான முதல் இறப்பாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது. மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும். இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் மும்பையில் ஜிபிஎஸ் நோய்க்கு முதல் இறப்பு பதிவாகியுள்ளன. வடலா பகுதியில் வசிக்கும் அவர், ஒரு மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வருகிறார். 53 வயதுள்ள இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புணேவுக்குச் சென்று அங்கு ஜிபிஎஸ் பரவியதாக அவர் தெரிவித்தார். ஜனவரி 23 அன்று இங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பல நாள்களாக ஆபத்தான நிலையில் இருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.