சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!
லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இது இந்தியாவின் குறைக்கடத்தி பயணத்தில் மேலும் ஒரு மைல்கல். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் ஒரு பெரிய நம்பிக்கை வாக்கு என்று கூறியுள்ளார்.
One more milestone in our semiconductor journey: Lam Research announces major investment of over Rs 10,000 cr in India. Big vote of confidence in PM @narendramodi Ji’s semiconductor vision.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 11, 2025
பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், செமிகண்டக்டர் துறைக்கு வேஃபர்-ஃபேப்ரிகேஷன் உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் உலகளாவிய சப்ளையர் ஆகும். ஜனவரி 1980 இல் நிறுவப்பட்ட லாம் ரிசர்ச் தற்போது உலகின் முன்னணி குறைக்கடத்தி நிறுவனமாகும்.
குறைக்கடத்தி துறையில் முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகள் இந்திய குறைக்கடத்தி பயணத்தின் ஒரு பகுதியாகும். குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிறுவுவதே இதன் குறிக்கோள்.