செய்திகள் :

வர்த்தகப் போர் அச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: அந்நிய நிதி முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், வர்த்தகப் போர் குறித்த அச்சம் முதலீட்டாளர்களை தொடர்ந்து கலக்கமடையச் செய்ததால், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 274.56 புள்ளிகள் குறைந்து, 76,019.04 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 78.45 புள்ளிகள் குறைந்து 22,993.35 புள்ளிகளாக இருந்தது.

மத்திய நேர வர்த்தகத்தில் நிஃப்டி 156.40 புள்ளிகள் குறைந்து 23,000 புள்ளிகளுக்கு கீழே சென்று 22,915.40 ஆக வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 645.04 புள்ளிகள் குறைந்து 75,668.97 புள்ளிகளில் இருந்தது.

நிஃப்டி 23,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தால் மேலும் சரிவுகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் தலால் ஸ்ட்ரீட் அவநம்பிக்கையால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு எஃப்.ஐ.ஐ ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் பங்குச் சந்தை விட்டு வெளியேறியதும் அத்துடன் டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகள் ஆகியவை முதலீட்டளர்களின் உணர்வை வெகுவாக எடைபோட்டது.

வர்த்தக முடிவில் இன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.52 புள்ளிகள் குறைந்து 76,171.08 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.55 புள்ளிகள் குறைந்து 23,045.25 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த ஐந்து நாட்களில், மும்பை பங்குச் சந்தை 2,290.21 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில், நிஃப்டி 667.45 புள்ளிகள் சரிந்ததுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா, சொமேட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் இன்று சரிந்து முடிந்த நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

இன்று 2,925 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,154 பங்குகள் உயர்நதும் 1,685 பங்குகள் சிரிந்தும் 86 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,486.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் ஷாங்காய் சரிந்தும், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்தும் முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.34 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 76.74 என்ற அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிகர லாபம் 52% அதிகரிப்பு

ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லாபம் 30% சரிவு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பர் காலாண்டில், 30 சதவிகிதம் சரிவடைந்து ரூ.12.97 கோடி ஆக உள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை... மேலும் பார்க்க

மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.50 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

மும்பை: கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து வில... மேலும் பார்க்க

சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 4.31% ஆக சரிவு!

புதுதில்லி: உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லரை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது.நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 202... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று மீண்டும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 157 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கின. 5வது நாளாக நேற்று பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்த நிலையில், ... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்தது.கடந்த ஐந்து நாட்களில... மேலும் பார்க்க

நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்களின் திடீர் வேலை விலகல் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் திடீரென பணியைவிட்... மேலும் பார்க்க