Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
பிரான்ஸ்: சர்வதேச அனல் அணு உலையில் பிரதமர் மோடி!
இண்டெர்நேஷனல் தெர்மோ நியூக்ளியர் எக்ஸ்பெரிமெண்டல் ரியாக்டர்(ஐடிஈஆர்) என்றழைக்கப்படும் சர்வதேச அனல் அணு உலை வளாகத்துக்கு இன்று(பிப். 12) பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ச் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் சென்றுள்ளனர்.
இது குறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச அனல் அணு உலை திட்டத்தில் பணியாற்றும் குழுவினருடன் சென்று அவ்வளாகத்தைப் பார்வையிட்டுள்லதுடன் அவர்களை பாராட்டினேன். இத்திட்டமானது, எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் அளவில்லா சுத்தமான எரிசக்தியைப் பெறுவதற்கான குறிப்பிடத்தக்கதொரு நகர்வாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
‘மினி சூரியன்’ என்றழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அறிவியல் திட்டத்தின் மூலம், சுமார் 500 மெகாவாட் திறன் எரிசக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்கால எரிசக்தி தேவையைக் கருத்திற்கொண்டு கட்டமைக்கப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.