செய்திகள் :

MS Dhoni: ``தோனியின் கண்களை பார்த்தால்..." -முன்னாள் வீரர் தவான் பகிரும் சுவாரஸ்யம்

post image

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் - சேவாக் ஓப்பனிங் கூட்டணிக்குப் பிறகு, வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியாக அமைந்தது ரோஹித் - ஷிகர் தவான் கூட்டணிதான். இதில், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டி மூலம் டெஸ்டில் அறிமுகமான தவான், தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 187 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். அதே ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆட்டங்களில் 363 ரன்கள் அடித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியதோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி

அதன்பின்னர், இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்த தவான், டெஸ்டில் 2,315 ரன்கள், ஒருநாள் போட்டியில் 6,793 ரன்கள், டி20-யில் 1,759 ரன்கள் அடித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது, அடுத்த வாரம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அம்பாசிடராக ஐ.சி.சி-யால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடன், 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ்கான், ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சமீபத்தில் ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் டிம் சவுதி ஆகியோரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அணியின் கேப்டனாக இருந்த தோனியைப் பற்றி தவான் பேசியிருக்கிறார். தனியார் ஊடக நேர்காணலில் பேசிய தவான், ``தோனி மிகவும் நிதானமாக இருப்பார். போட்டிக்குப் பிறகு அதிகம் பேசமாட்டார். தோனியின் இருப்பே மிக பலமாக இருக்கும். நான் அவரின் தலைமையின்கீழ் விளையாடியபோது அனுபவம் வாய்ந்த கேப்டனாக ஏற்கெனவே அவர் மாறிவிட்டார், நிறைய சாதித்துவிட்டார்.

தவான்

ஒரு அணி எப்படி செயல்படுகிறது, வீரர் எப்படி தயாராக இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். தோனி ஒருபோதும் சத்தம்போட்டு நான் பார்த்ததில்லை. அதுதான் அவருடைய பலம். அதைத்தான் களத்துக்கும் கொண்டுவருகிறார். ஆனால், அவரின் கண்களைப் பார்க்கும்போது நீங்கள் பயப்படுவீர்கள்." என்று கூறினார்.

கோலி - தோனி

மேலும், விராட் கோலி குறித்து பேசுகையில், ``விராட் வித்தியாசமான ஆற்றல் கொண்டவர். ஃபிட்னஸ் கலாசாரத்தையே வெகுவாக மாற்றிவிட்டார். அதேசமயம், கேப்டனாகவும் முதிர்ச்சி அடைந்து கொண்டே இருந்தார்." என்று தெரிவித்தார்.

RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.Virat Kohliபெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப... மேலும் பார்க்க

Champions Trophy: விலகிய டாப் 4 ஆஸி., வீரர்கள்; 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக ஸ்மித்!

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும், மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு 8 ஆண்டுகளாக சாம... மேலும் பார்க்க

'பும்ராவுக்கு பதில் மாற்று வீரரை கண்டறிய முடியாது; இந்திய அணியின் ரொனால்டோ அவர்'- ஹர்மிசன் புகழாரம்

பும்ராவுக்கு பதில் மாற்று வீரரைக் கண்டறிய முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஹர்மிசன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு (பிப்ரவரி12) அறிவிக்கப... மேலும் பார்க்க

KL Rahul: `கே.எல்.ராகுலுக்கு இந்த நிலைமையா, அணியில் என்ன நடக்கிறது?' கம்பீர் மீது ஸ்ரீகாந்த் ஆதங்கம்

இந்திய அணியும் பிளெயிங் லெவனும்..!இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணிதான் சாம்பியன்ஸ் டிராபியிலும் ஆடப்போகிறது. ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடரைக் ... மேலும் பார்க்க

தோனி வழிநடத்திய இளம் வீரர்கள்; 'UNBEATEN DHONI'S DYNAMITES' நிகழ்ச்சியை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் MS தோனி வழிநடத்திய இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி கோப்பை வென்று சாதனை நிகழ்த்தியது.கிட்டத்தட்ட 12 ஆண... மேலும் பார்க்க

Kohli: "உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்" - ரசிகர்களுக்குக் கோலி அட்வைஸ்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 12) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ``பி... மேலும் பார்க்க