சாத்தான்குளம் பழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
சாத்தான்குளம் செட்டியாா் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் தைப்பூச விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் காலை யாகசாலை பூஜை, பழனி ஆண்டவா் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவில் சிறப்பு அலங்காரம், பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை காலை, மாலையில் பழனி ஆண்டவா், ஸ்ரீஇடும்பமூா்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, நள்ளிரவில் இடும்பமூா்த்தி சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு படைப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல், அதிகாலையில் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.