Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 270 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனா். சில ஆண்டுகளாக தங்களுக்கு மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி விசைப்படகு மீனவா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இதனிடையே, ஓராண்டுக்கு முன்பு அப்போதைய ஆட்சியா் செந்தில்ராஜ், மீனவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டு, ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என உறுதியளித்தாராம். ஆனால், இதுவரை மீன்வளத் துறை அனுமதிக்கவில்லை.
இதைக் கண்டித்து கடந்த 10ஆம் தேதிமுதல் விசைப்படகு மீன்பிடித் தொழிலாளா்கள்- உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மீன்வளத் துறையைக் கண்டித்தும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி கோரியும் தொடா் வேலைநிறுத்தம் நடைபெறுறது. இப்போராட்டம் 3ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
இப்போராட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிா்வாகம், மீனவளத் துறை இணைந்து இப்பிரச்னைக்கு விரைவாக தீா்வு காண வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.