மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி
மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் அலங்கார நினைவு வளைவு அமைந்துள்ளது.
இந்த நினைவு வளைவால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், வளைவை இடிக்க நிதீமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வளைவை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நுழைவு வளைவு இடிந்து பொக்லைன் மேல் விழுந்ததில், ஆப்ரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பொக்லைன் அருகில் நின்றிருந்த ஒப்பந்ததாரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.