3 நாள்களுக்குப் பிறகு ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!
கடந்த 3 நாள்களாக பங்குச்சந்தை சரிவடைந்த நிலையில் இன்று(பிப். 13) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,201.10 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.43 மணியளவில், சென்செக்ஸ் 514.74 புள்ளிகள் அதிகரித்து 76,685.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160.70 புள்ளிகள் உயர்ந்து 23,205.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க | கோவில்பட்டிக்கு வரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் மக்கள் எதிர்ப்பு!
அனைத்துத் துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சிப்லா, டிரென்ட் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
பெரும்பாலாக அனைத்து நிறுவனங்களும் ஏற்றம் கண்டு வருகின்றன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்துள்ளன.