செய்திகள் :

BJP: "ஜெயக்குமார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால்..." - கரு.நாகராஜன் பேட்டி

post image

"திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்கிறார்களே, தி.மு.க-வினர்?"

"தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமாகவே நடத்தப்பட்டது. மக்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது, அவர்களை அடைத்து வைப்பது, தினசரி பேட்டா கொடுப்பது என தி.மு.க-வினர் செய்த அட்டூழியங்கள் கொஞ்சம், நஞ்சம் இல்லை. எனவே, இதை வெற்றியாக மக்களோ, எதிர்க்கட்சிகளோ பார்க்கவில்லை"

முதல்வர் ஸ்டாலின்

"இதன் மூலமாகத் தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்படவில்லை என்கிறீர்களா?"

"தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தினாலும் தேர்தலின்போது பணியாற்றுவது தமிழக அதிகாரிகள்தான். எனவே அவர்கள் ஆளும் கட்சியின் அழுத்தத்துக்கு உட்படலாம், கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்"

தேர்தல்

"இதேபோல்தான், 'வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க முறைகேடு செய்கிறது' என, எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?"

"இந்த கருத்தை இந்தியா கூட்டணியிலிருக்கும் பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் போன்றவர்களே சொல்வதில்லை. தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில், இப்படியெல்லாம் பேசுகிறார், ராகுல் காந்தி. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க உச்ச நீதிமன்றமே அழைப்பு விடுத்தது. அப்போது எதிர்க்கட்சிகளால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் தற்போது தோல்வியை மறைப்பதற்கு இப்படியெல்லாம் பேசுகிறார்கள்"

வாக்குப்பதிவு

"யாருமே இல்லாத ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட பெரியார் குறித்து விமர்சனம் செய்ததால்தான் சீமான் டெபாசிட் வாங்கவில்லை என்கிறார்களே தி.மு.க-வினர்?"

"சீமான் ஒன்றும் புதிதாகக் கண்டுபிடித்துப் பேசவில்லை. ஏற்கெனவே கலைஞர், அண்ணா பேசியதைத்தான் பேசுகிறார். அதேநேரத்தில் தனி நபராக 24,151 வாக்குகள் பெற்றிருப்பதும் சாதனைதான்"

சீமான்
சீமான்

"ஆனால் அவர் பெற்றிருப்பது பா.ஜ.க-வின் வாக்குகள்தான். எதற்காக இப்படியெல்லாம் பேசினாரோ அது நடந்துவிட்டது என்கிறார்களே?"

"தி.மு.க-வின் வாக்கு வங்கியைத்தான் உடைக்கிறார். எனவே அதை மறைப்பதற்காக இப்படியெல்லாம் சொல்கிறார்கள். பா.ஜ.க தொண்டர்கள் எதற்காகவும், எப்போதும் மாறமாட்டார்கள்"

பாஜக

"'திருநெல்வேலி அல்வாவை விடவும் மத்திய அரசு கொடுக்கும் அல்வா ஃபேமஸாக இருக்கிறது' எனப் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?"

"மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும், அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000, கல்விக்கடன் முழுவதும் ரத்து, நகைக்கடன் ரத்து எனத் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அல்வா ஏராளம். ஆனால் மத்திய அரசு ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்கிறார்கள்"

முதல்வர் ஸ்டாலின்

"'பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்பதே அ.தி.மு.க-வின் இறுதியான முடிவு' என ஜெயக்குமார் சொல்கிறாரே? பிறகு எதற்கு பா.ஜ.க தலைவர்கள் அ.தி.மு.-கவைக் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்?"

"தேசிய கட்சி என்பதால் கூட்டணி குறித்த முடிவுகளை டெல்லிதான் எடுக்கும். ஜெயக்குமார் எங்களிடம் வந்து நேரடியாகக் கூட்டணி வேண்டாம் எனத் தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து நிருபர்களிடம்தான் 'பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம்' எனக் கோடாங்கி போல அடித்துக்கொண்டே இருக்கிறார். அ.தி.மு.க-வுடன் கூட்டணியில்லை என்பதால் பா.ஜ.க வேதனையிலா இருக்கிறது? நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். தனது உடல்நிலையில் ஜெயக்குமார் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் தூக்கத்தில் கூட பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையெனப் பேசும் நிலைக்கு அவர் சென்றுவிடுவார்"

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

"திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றக் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன" என சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டிருக்கிறாரே?"

(கடும் கோபமாக) "சு.வெங்கேடசனுக்கு உண்மையிலேயே மண்டை சரியாக வேலை செய்திருந்தால் நவாஸ்கனி அங்குச் சென்று பிரியாணி சாப்பிட்டபோது கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் ஏன் கேட்கவில்லை.. அவர் மதவாதியா.. நான் மதவாதியா.. சு.வெங்கேடசன் மத சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்துகொள்கிறார்.. இந்து மக்கள் ஓட்டு இனி சு.வெங்கேடசனுக்குக் கிடைக்காது. 85 % தமிழக மக்களுக்காக நாங்கள் பேசுகிறோம். இதற்காக எங்களை மதவாதி எனச் சொல்லலாமா? ஆனால் நீங்கள் 15% மக்களுக்காகக் கண்டும் காணாமல் இருக்கிறீர்கள்? கூட்டணிக்கு ஜால்ரா அடிக்காதீர்கள்"

சு.வெ
சு.வெ

"'தாலிபான் திமுக அரசு. இந்துக்களை இம்சிக்கிறது. தமிழ்நாட்டின் அயோத்தி திருப்பரங்குன்றம். அதற்கான யுத்தம் இங்கிருந்துதான் தொடங்குகிறது' என ஹெச்.ராஜா பேசியது சரிதானா?"

"ஹெச்.ராஜா அண்ணன் ஒரு தர்ம போராளி. இந்து மக்களுக்கு ஒரு பிரச்னையென்றால் தனது கருத்தை அழுத்தமாக வெளிப்படையாகப் பேசுவார். மேற்கொண்டு இதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது"

ஹெச்.ராஜா

"தனது நாட்டவரைக் கைவிலங்கிட்டு அமெரிக்கா அழைத்து வந்ததாதற்காக கொலம்பியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் மோடியைப் பார்த்து உலக நாடுகள் பயம் கொள்கிறது என நீங்கள் சொல்லும் நிலையில் இந்தியா மவுனமாக இருப்பது சரியா?"

"அந்த நாட்டின் சட்டப்படிதான் இதைச் செய்திருக்கிறார்கள். கைவிலங்கிட்டு அழைத்துவரப்பட்டவர்கள் அங்குத் தவறு செய்து மாட்டிக்கொண்டவர்கள்தான். அனைவரின் கையிலும் போதை ஊசி செலுத்தியதற்கான தடம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என அந்த நாடு அஞ்சுகிறது. மேலும் இவ்வாறு நாடு கடத்தப்படுவது இது முதல்முறையும் அல்ல. இதுகுறித்து விரிவான தகவலை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா
கொலம்பிய மக்களை போலவா?!

"மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் அழியும் பாதைக்குச் செல்கிறது என்கிறாரே ராகுல் காந்தி"

"ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பொய் சொல்லி வருகிறார். பிறகு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார். அப்படித்தான் இதுவும் ஒரு பொய். மகாராஷ்டிராவில் 15 நாட்கள் நான் தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். ராகுல் காந்தி சொல்வது உண்மையாக இருந்திருந்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கும். அங்குக் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. எனவே அதிலிருந்து வெளியில் வருவதற்குத்தான் இப்படியெல்லாம் பொய் சொல்கிறார்"

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"ஆர்.பி.உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார்" - டி.டி.வி.தினகரன் கிண்டல்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.ம.மு.க தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அ.ம.மு.க ... மேலும் பார்க்க

New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" - நிதியமைச்சர் சொல்வதென்ன?

இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாகத் த... மேலும் பார்க்க

``கலைஞரிடமிருந்து வந்த அழைப்பு; மனைவி தந்த தைரியம்"- காதலைப் பகிரும் தங்கம் தென்னரசு

தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே வீடு முழுவதும் சிரிப்புச்சத்தத்தை எதிரொலிக்கிறது நிதி... மேலும் பார்க்க

OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்க... மேலும் பார்க்க