செய்திகள் :

மகா கும்பமேளாவில் கத்ரீனா கைஃப்பின் கணவர்!

post image

நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் நடிகருமான விக்கி கௌஷால் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இன்று(பிப். 13) பிரயாக்ராஜுக்கு வருகை தந்தார்.

பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய விக்கி கௌஷால், “நான் நன்றாக உணர்கிறேன். மகா கும்பமேளாவுக்கு வருகை தர வேண்டுமென காத்திருந்த எனக்கு இப்போது இங்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள பிரயாக்ராஜுக்கு சென்றுள்ள விக்கி கௌஷாலின் பாதுகாப்பை உறுதி செய்ய அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகனான அரசர் சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘சாவ்வா’ திரைப்படத்தில் விக்கி கௌஷாலும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ளனர்.

தினேஷ் விஜான் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். பிப். 14 ‘சாவ்வா’ திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளான இன்று(பிப். 13) விக்கி கௌஷால் கும்பமேளாவையொட்டி புனித நீராடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் பின்தொடருவதை நிறுத்திய ராம் சரண்! என்ன காரணம்?

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுனுக்கும் ராம் சரணுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ... மேலும் பார்க்க

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் டீசர்..!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படமாக ’கிங்டம்’ வெளியாகவுள்ளது.கௌதம் தின்னாணூரி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் இன்று(பிப். 12) வெளியிடப்பட்டுள்ளது.கிங்டம் மே. 30-ஆம் த... மேலும் பார்க்க

த்ரிஷாவின் சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?

நடிகை த்ரிஷாவின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது எக்ஸ்(முன்பு ‘ட்விட்டர்’ என்றழைக்கப்பட்டது) தளக் கணக்கை யாரோ முடக்கியுள்ளனர் என்று திரிஷா பதிவிட்டு... மேலும் பார்க்க

ஆக்‌ஷனில் மிரட்டும் மிஷன் இம்பாஸிபிள் கடைசி பாகம் டீசர்!

உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கானிங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற... மேலும் பார்க்க

உன்னுடனேயே எப்போதும்..! -மகேஷ் பாபுவின் காதல் பதிவு

நடிகர் மகேஷ் பாபு இன்று(பிப். 10) தனது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது 20-ஆவது திருமண நாளையொட்டி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”நீயும் நானும் 20 அழகான ஆண்... மேலும் பார்க்க