செய்திகள் :

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்: யூடியூபருக்கு காவல் துறை சம்மன்!

post image

உடலுறவு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர் சமய் ரெய்னா காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படுள்ளது.

என்ன நடந்தது?

அண்மையில் நடைபெற்ற நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் தனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், மேற்கண்ட வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக ரெய்னா நேற்று(பிப். 12) விளக்கமளித்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர காவல் துறையின் இணையவழிக் குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவான சைபர் க்ரைமும், மும்பை காவல் துறையும் யூடியூபர் சமய் ரெய்னாவை காவல் நிலையத்தில் அடுத்த 5 நாள்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சமய் ரெய்னா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், இதனையடுத்து விசாரணைக்கு உடனடியாக ஆஜராக முடியாதென்பதால் கூடுதல் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ரெய்னாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரம்: புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். அதேபோல், மகாராஷ்டிர பேரவையின் காங்கிரஸ் தலைவராக விஜய் நம்தேவ்ராவை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ந... மேலும் பார்க்க

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிக... மேலும் பார்க்க

இலங்கை: ரூ.8,690 மதிப்பிலான இரு மின் திட்டங்களை திரும்பப் பெற்றது அதானி குழுமம்

இலங்கையில் 1 பில்லியன் டாலா் (ரூ.8,690 கோடி) மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனா்ஜிஸ் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை தலைநகா் கொழும்பில் ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை விவரம் இல்லை: மத்திய அரசு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் இந்தியா்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ப... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ‘அதிருப்தி’ கருத்துகள் மீண்டும் சோ்ப்பு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இரு அவைகளிலும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அதிருப்தி கருத்துகள் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள 54 இந்தியா்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்

வெளிநாடுகளில் 54 இந்தியா்கள் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. அண்மையில் ஏமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சோ்ந்த நிமிஷா ப... மேலும் பார்க்க