கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
மகாராஷ்டிரம்: புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அதேபோல், மகாராஷ்டிர பேரவையின் காங்கிரஸ் தலைவராக விஜய் நம்தேவ்ராவை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்ததாக காங்கிரஸ் தெரிவித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு)-சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி, ஆளும் பாஜக-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு)-சிவசேனை (ஷிண்டே பிரிவு) கட்சிகளின் மகாயுதி கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.
காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் மாநில தலைவா் பதவியை நானா படோலே ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், புதிய தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 2014 முதல் 2019 வரை புல்தானா பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தாா்.