ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
பொம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பொம்பூரில் 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
அதன்படி, வானூரை அடுத்த பொம்பூா் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 3473.6 சதுர அடி பரப்பளவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா். இதில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், வானூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா்
பருவ கீா்த்தனா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அன்புமணி, மாவட்ட சுகாதார அலுவலா் சா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.