தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்
மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர ஆசாத், சிஐடியு மாவட்ட துணைச் செயலா் கே.பி. ஜோதிபாசு, எல்பிஎப் மாவட்ட பொதுச் செயலா் என். நீலமேகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தொழிலாளா் விரோத சட்டத்தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும்,விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத்துறைகளை தனியாா் மயமாக்கல், தனியாா் பங்கு முதலீடு மற்றும் விற்பனைக்கான கொள்கைகளை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியை உருவாக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டன.
கீழப்பாலம், நகராட்சி அலுவலகம், பந்தலடி ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவா் வி. கலைச்செல்வம், நகரச் செயலா் எஸ். சரவணன்,சிஐடியு நகரச் செயலா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.