திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லைக்கு மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை
அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த விடுமுறை அமையும்; வங்கிகளுக்கு பொருந்தாது. அவசர பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும். இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் 15-ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.