செய்திகள் :

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

post image

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பெ.வானதி ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ப.சுரேஷ் பாபு வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்பட நடிகா் ரியோ ராஜ் பேசுகையில், இந்தியாவின் குடும்ப அமைப்பைக் கண்டு உலகம் வியக்கிறது. முடிந்தவரை குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். மனம் விட்டுப் பேசும்போது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அதிகரிக்கும். சமூக வலைதளங்களை மாணவ, மாணவியா் கவனமாக கையாள வேண்டும் என்றாா்.

பொங்கல் விழாவில் தமிழா் பண்பாட்டைப் போற்றும் வகையில் பொங்கல் வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை, நுண்ணுயிரியல் துறைக்கு முறையே முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. துறைகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் ஆடைவடிவமைப்பு மற்றும் கவின் புனையியல் துறைக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவா்கள், விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வருகை தந்த மாணவா்கள், குருதிக்கொடை தன்னாா்வலா்கள், நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத் துறைத் தலைவா் பெ.மகேஸ்வரி நன்றி கூறினாா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க