செய்திகள் :

தென்னாப்பிரிக்க வீரரின் பேட்டிங்கில் மயங்கிய அஸ்வின்..!

post image

தென்னாப்பிரிக்க வீரர் ரயான் ரிக்கெல்டனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் தமிழக வீரர் ஆர் அஸ்வின்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 43.3 ஓவா்களில் 208 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளும் இழந்தது.

தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டா்கள், பௌலா்கள் என இரு தரப்புமே அசத்த, ஆல்-ரவுண்ட் ஆட்டத்துடன் வென்றது அந்த அணி.

தென்னாப்பிரிக்கா சார்பில் சதமடித்த ரயான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது வென்றார். பலரும் இவரது பேட்டிங்கை பாராட்டி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவரை ரிக்கெல்டன் சிறப்பாக விளையாடினார்.

இது குறித்து தமிழக வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ரயான் ரிக்கெல்டன் நல்ல வீரர். ஆனால், அவர் ரஷித் கானை எதிர்கொள்ளும் விதம் மிகவும் மயக்குவதாக இருக்கிறது என்றார்.

10 டெஸ்ட்டில் 616 ரன்கள், 6 ஒருநாள் போட்டிகளில் 291 ரன்கள் என இரண்டு ஃபார்மட்டிலும் 41 சராசரியை ரயான் ரிக்கெல்டன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய பென் டக்கெட்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது... மேலும் பார்க்க