திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.
நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், அமைச்சர்கள் சுவதந்திர தேவ் சிங் மற்றும் நந்த் கோபால் குப்தா ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள்.
நட்டாவும் அவரது குடும்பத்தினரும் சூரியக் கடவுளை வழிபட்டதோடு, கங்கை நதிக்கு புடவை, தேங்காய், பூக்கள் மற்றும் பிற காணிக்கைகளை வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பாஜக தலைவர் சனிக்கிழமை பிற்பகல் பிரயாக்ராஜ் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், உபி பாஜக தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி, அமைச்சர் நந்த் கோபால் குப்தா மற்றும் பிரவீன் படேல் எம்பி ஆகியோர் வரவேற்றனர்.
உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மகா கும்பமேளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.