கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்முட்டுக்கூா் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் வழி தவறி வந்த புள்ளிமான் சனிக்கிழமை விழுந்து விட்டது. இது குறித்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வனப் பகுதியில் விட்டனா்.