பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
மணிப்பூர்: அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கிராமத் தொண்டர்கள் சிலரை கைது செய்ததற்காக பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் கிளார்ச்சியாளர்கள் விடியோ வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தடைசெய்யப்பட்ட காங்கிலிபக் கம்யூனிஸ்ட் கட்சியின் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மொய்ராங்தெம் தொய்பா (36) பிஷ்ணுபூர் மாவட்டத்திலும், சைகோம் லெம்பர்ஸ் சிங் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
சிங்கும் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மற்றொரு நடவடிக்கையில், மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த குழு தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்களைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்கள் வாங்கெம் ரோஹித் சிங் (18), தங்ஜம் நோகன் (18) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் கடைகள் மற்றும் வாகனங்களில் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.