ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்
தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிஷியின் நியமனம் இறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் அவர், தில்லி சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "என்னை நம்பிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், கட்சிக்கும் நன்றி. வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்னையை எழுப்புவோம்.
வழக்குரைஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி நிறைவேற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.