சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றியுள்ளார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அரசு அதிகாரிகள் என்று கூறி சிலர் தன்னை ஏமாற்றியதாகவும், தனது செல்போன் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடா்புடையது என்று தன்னை சிறையில் அடைப்பதாக மிரட்டியதாக ஒரு பெண் தில்லி மேற்கு காவல் சரக சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து சைபா் பிரிவு போலீஸார் விசாரணை தொடங்கினர்.
மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த வழக்கில் முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட பலா் கைது செய்யப்பட்டனா். மேலும் முக்கிய குற்றவாளியான கேரளம் மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த அகமது நிஷாம் (25) தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், சைபா் மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்குத் தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அகமது நிஷாமை தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர்.
மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றியதும், அதற்கு ஈடாக ரூ.10,000 பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.