செய்திகள் :

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

post image

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் சில பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பல சூழல்களில் இத்தகைய பிரிவினைவாதிகளுடன் சில வெளிநாட்டு சக்திகள் இணைந்துகொண்டு நாட்டின் இறையான்மையை பலவீனமாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஸ்வர் தாம் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 23) பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''கடந்த சில நாள்களாக சில பிரிவினைவாத தலைவர்கள் மதத்தை கேலி மற்றும் கிண்டலுக்குள்ளாக்கி மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சில வெளிநாட்டுத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கின்றனர்.

இந்து மதத்தை வெறுக்கும் மக்கள், நூற்றாண்டுகளாக நாட்டில் ஏதோவொரு பகுதியில் இருந்துகொண்டுதான் உள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாகிவருவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி,

''அடிமை மனநிலையில் வீழ்ந்தவர்கள் தொடர்ந்து நமது நம்பிக்கைகளையும், சடங்குகளையும், கோயில்களையும் விமர்சித்து வருகின்றனர்.

நமது கலாசாரம், கொள்கைகள், விழாக்கள், பாரம்பரியங்கள் மற்றும் உடைகள் என அனைத்தின் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். இயல்பிலேயே முற்போக்கான மதத்தையும் கலாசாரத்தையும் முடக்கத் துடிக்கிறார்கள். நமது சமூகத்தைப் பிரிக்கின்றனர். நமது ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை.

இந்த நேரத்தில் தீரேந்திர சாஸ்த்ரி ஒற்றுமை என்ற மந்திரத்தின் மூலம் மக்களை விழிப்படையச் செய்து இணைத்து வருகிறார். தற்போது சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் புதிய தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

மக்கள் பயனடையும் வகையில் புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டுகிறார். பாகேஸ்வர் தாமின் ஆசி உங்கள் அனைவருக்கும் இங்கு கிடைக்கும். முறையான சிகிச்சை, உணவு வளமான வாழ்வு இங்கு உறுதி செய்யப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி: பிரதமா் மோடி நாளை விடுவிப்பு

பாட்னா: பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமாா் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள... மேலும் பார்க்க

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்துகொள்ள இதுவரை 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்ப... மேலும் பார்க்க

28 மீ. உயரம்... புதிய சாதனை படைத்த தில்லி மெட்ரோ!

மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உ... மேலும் பார்க்க

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மின் பொறியாளர்கள் அமைப்பு அழைப்பு!

புதுதில்லி: மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.மின்சார பயன்பா... மேலும் பார்க்க

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க