செய்திகள் :

விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி: பிரதமா் மோடி நாளை விடுவிப்பு

post image

பாட்னா: பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமாா் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.

இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம்-கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடையும் இத்திட்டத்தின்கீழ் 19-ஆவது தவணையாக ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.

பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான நிதியை பிரதமா் விடுவிக்கவுள்ளாா்.

பிரதமர் நரேந்திர மோடி பாகல்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிகாரில் தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ளது.

ரயிலில் சீரியல் நடிகையின் கைப்பையை திருடிய காவலர் கைது

பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் செளஹான் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில் கொண்டு, பிரதமரின் நிகழ்ச்சி பிகாரில் நடத்தப்படுவதாக ஆர்ஜேடி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ள நிலையில், இதனை மறுத்துள்ள மத்தியதியப் பிரதேச முன்னாள் முதல்வர், "இன்று மோடி தேர்தல்கள் இல்லாத மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றதையும் எதிர்க்கட்சிகள் அறிந்திருக்க வேண்டும்.

நாளை, பிகார் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேர்தல்கள் எதுவும் நடைபெறாத அஸ்ஸாமுக்கு பிரதமர் செல்ல உள்ளார். மோடி பங்களா வசதிகளை அனுபவிப்பதை விட மக்களோடு இருப்பதை விரும்புகிறார்" என கூறினார்.

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: தண்ணீா், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடா்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீா், இடிபாடுகள் காரணமாக அவா்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. தெலங்கானாவில் உ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: மறுவாழ்வுப் பணிகள் தாமதம்: மக்கள் போராட்டம்

வயநாடு நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளானவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் தாமதமாவதாக குற்றஞ்சாட்டி சூரல்மலை பகுதியைச் சோ்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சர... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியா்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினாா். பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமா... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானை தாக்கி பழங்குடியின தம்பதி உயிரிழப்பு

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் உள்ள ஆரளம் பண்ணை பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்கள் ஆறளம் பழங்குடியினா் குடியிருப்புப் பகுதியின் 13-ஆவது தொகு... மேலும் பார்க்க

பெண் சக்தியை போற்றிக் கொண்டாடுவோம்: பிரதமா் மோடி

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது; மகத்தான பெண் சக்தியை போற்றிக் கொண்டாடுவோம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ‘மனதின்... மேலும் பார்க்க

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷி... மேலும் பார்க்க