செய்திகள் :

எலான் மஸ்கிற்கு வங்கதேச இடைக்கால பிரதமர் அழைப்பு!

post image

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த பிப்.19 அவர் வெளியிட்ட கடிதத்தில் எலான் மஸ்க் வங்கதேசத்திற்கு வருகைத் தருவதின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கிய பயனாளர்களான வங்கதேசத்தின் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை அவர் சந்திக்கலாம் எனவும் வளமையான எதிர்காலத்தை உருவாக்க இருதரப்பும் இணைந்து செயல்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்ற்கை கோள் தொழில்நுட்பமான ஸ்டார் லிங்கை வங்கதேசத்தின் உள்கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் இளைஞர்கள், விளிம்புநிலை பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்கத்தினருக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!

இந்நிலையில், அடுத்த 90 நாள்களுக்குள் ஸ்டார் லிங்க் சேவையை வங்கதேசத்தில் துவங்க, அந்நாட்டு அரசின் உயர் அதிகாரியான கலீலுர் ரஹுமான் என்பவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கிட பிரதமர் யூனுஸ் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்.13 அன்று இந்த இணைய சேவை குறித்தும் எதிர்கால வளர்ச்சிகள் குறித்தும் எலான் மஸ்குடன் பிரதமர் யூனுஸ் தொலைபேசி வாயிலாக கலத்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்ய... மேலும் பார்க்க

சைபா் மோசடி நபா் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை சென்னை விமான நிலையத்தில் தில்லி குருகிராம் போலீஸாா் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சைபர் மோசடி மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையை கிரிப்ட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளி... மேலும் பார்க்க

சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அபாயம் மிகுந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்திய இமயமலை சாகசம் மற்றும் சுற்றுலா மையம் (IHCAE) சார்பில், நேற்று ... மேலும் பார்க்க

ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.தப்ளேஜன் மாவட்டத்தின் பதிபரா ... மேலும் பார்க்க