ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
தப்ளேஜன் மாவட்டத்தின் பதிபரா பகுதியில் கொண்டுவரப்படவிருக்கும் ரோப் கார் திட்டத்தினால் அப்பகுதியிலுள்ள வரலாற்று சிறப்பு அம்சங்கள் அழிவுக்குள்ளாகும் எனக் கூறி அந்த திட்டத்திற்கு எதிராக ‘நோ கேபிள் கார்’ எனும் குழு போராடி வருகின்றது.
இந்நிலையில், நேற்று (பிப்.22) போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உண்டான மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறையில் தொடர்புடைய 15 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து, தப்ளேஜங் மாவட்ட அதிகாரிகள் பதிபரா பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இன்று (பிப்.23) காலை முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
இதையும் படிக்க: வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!
அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், பேரணிகள், போராட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபடவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்.20 அன்று பதிபரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதினால் பதிபரா ரோப் கார் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அந்நாட்டு எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.