ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
கூலி வெளியீடு அப்டேட்!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்குகிறது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, ‘காவாலா’ பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கூலி படத்தை மே மாத வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.