ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு!
பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங்கிலிருந்து நடிகையான இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், எதுவும் பெரிய வரவேற்பைக் கொடுக்காததால் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்..
ஹிந்தி மட்டுமல்லாது கன்னடத்தில் லவ் இஸ் பாய்சன் (love is poison) என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் ஆயிரத்தில் ஒருவன்!
இந்த நிலையில், பொதுவெளியில் பூனம் பாண்டே செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியாக வந்த நபர் ஒருவர், பூனம் உடன் செல்ஃபி எடுப்பதற்காக செல்போனை கையில் எடுத்தார். பூனம் கொஞ்சம் தள்ளி நிற்க, அந்த நபர் பூனமுக்கு முத்தம் கொடுக்க முயன்றார். உடனடியாக, சுதாரித்துக்கொண்ட பூனம் பாண்டே அந்நபரை தள்ளிவிட்டார்.
A guy misbehaved with Poonam Pandey, tried to kiss her forciblypic.twitter.com/O2m8ivt4Uu
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 21, 2025
பிரபல நடிகையிடம் யாரோ ஒருவர் அப்படி நடந்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், இந்த விடியோ ஸ்கிரிட்-ஆக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம், கடந்தாண்டு தான் இறந்ததாகப் போலிச் செய்தியை பரவச்செய்தார் பூனம் பாண்டே. பின், கர்ப்பப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக அப்படி செய்ததாகச் சொன்னார். இதுவும் அதுபோல் ஏதாவதா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.