செய்திகள் :

விஜய் சேதுபதி படத்தில் ரோஷினி ஹரிப்ரியன்!

post image

சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்பு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் 2019-ல் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன். 2021 வரை இந்தத் தொடர் ஒளிபரப்பானது.

இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடித்தார். சிறப்புத் தோற்றத்தில் சில நாள்களுக்கு மட்டுமே இதில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகளுக்காக முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக பங்கேற்று மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

அதில் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. சூரி நாயகனாக நடித்த கருடன் படத்தில் ரோஷினி நடித்திருந்தார். இதில், இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி - இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படத்தில் ரோஷினி நடித்துவருகிறார்.

இதில் நித்யா மெனன் முதன்மை நாயகியாக நடிக்க, ரோஷினி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!

கூலி வெளியீடு அப்டேட்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. ... மேலும் பார்க்க

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு!

பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடலிங்கிலிருந்து நடிகையான இவர் சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் ... மேலும் பார்க்க

கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை: நடிகை மணிமேகலையின் புதிய முயற்சி!

சின்ன திரை நடிகை மணிமேகலை தனது வாழ்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் த... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் ஆயிரத்தில் ஒருவன்!

நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். 2010-ல் இப்படம் வெளியானபோது கடுமையான எ... மேலும் பார்க்க