சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!
பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 119 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ``விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 400-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரையில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இது நாம் விண்வெளி துறையில் புதிய உயரங்களை அடைவதற்கான வலிமையைக் காட்டுகிறது. அனைத்து துறையிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்.
மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் எனது சமூகவலைதளக் கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்கவிருக்கிறேன். அன்றைய தினத்தில் பெண்கள் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!