பிரபு தேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ், எஸ். ஜே. சூர்யா!
நடன நிகழ்ச்சியில் பிரபு தேவாவுடன் முன்னணி நடிகர்கள் இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா தன்னுடைய முதல் நடன நிகழ்ச்சியை சென்னை ஒய்எம்சிஏ திடலில் நேற்று (பிப். 22) நடத்தினார். இதில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், பிரபு தேவா தான் நடித்த, நடன இயக்குநராகப் பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மானின் மெலடிகளும் தேவாவின் குத்து பாடல்கள் என ரசிகர்களும் நடனமாடியபடியே நிகழ்ச்சியைக் கொண்டாடினர்.
இதையும் படிக்க: ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் டீசர்!
முக்கியமாக, ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.
Two iconic trendsetters one stage ❤️@PDdancing@dhanushkraja#PrabhuDevasVibe Live Concert in Chennai today! #Dhanushpic.twitter.com/eo4BWIOxdy
— Gowtham Soupboy (@Gowtham_Soupboy) February 22, 2025
மேலும், நடிகர்கள் பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ப்ரீத்தி அஸ்ராணி, பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால், உள்ளிட்டோர் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
Vera level vibe with vadivelu and @iam_SJSuryah
— Cuts by Naveen (@naveen_240) February 23, 2025
#Prabhudevaconcert#PrabhuDevasVibepic.twitter.com/UCgfUWFfVU