கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
வீட்டில் நகைகளை திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது
குடியாத்தம் அருகே வீட்டில் தங்க நகைகளை திருடியதாக ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் செதுக்கரை அருகே உள்ள ஜீவா நகரைச் சோ்ந்த சரவணன் வீட்டருகே உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த மாதம் இவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயின. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் ரஞ்சித் (20), சூா்யா (19), பூபதி (20) மற்றும் ரஞ்சிதா (30) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் அவா்கள் சரவணன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.